tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
மன அழுத்தத்திலிருந்து விடுபட, சில எளிய உணவுமுறைகளால், உடனடி நிவாரணம் கிடைப்பதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
மன அழுத்தத்திலிருந்து விடுபட, சில எளிய உணவுமுறைகளால், உடனடி நிவாரணம் கிடைப்பதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்

மன அழுத்தத்திலிருந்து விடுபட, சில எளிய உணவுமுறைகளால், உடனடி நிவாரணம் கிடைப்பதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்

Home8

பொதுவாக இப்போதைய கால கட்டத்தில் உடம்பில் பல பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணம் என்றால், அது மன அழுத்தம். பொதுவாக வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை பளு அதிகமாக இருப்பவர்களுக்கு, மன அழுத்தம் உருவாக காரணமாக அமைகிறது. மேலும் வேலைப்பளு உள்ளவர்கள்  குறிப்பிட்ட காலத்திற்குள்  வேலைகளை  முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் ஸ்ட்ரெஸ் அதிகமாகி மன அழுத்தம் உருவாக காரணமாகிறது.


மனஅழுத்தத்தினால் பாதிக்கப் படுகிறவர்கள், அதிக அளவு பாதித்திருந்தால், இது மரணம் வரை கூட கொண்டு சென்று விடும், என்பதால் மன அழுத்தம் ஒரு வியாதியாக கருதபடுகிறது. இதற்கு மருத்துவர்களிடம் ஆலோசனை மற்றும் தீர்வு பெறாவிட்டால்  , அதிகஅளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும். மேலும் மன அழுத்தத்திலிருந்து விடுபட நாள்தோறும் யோகா, தியானம்  செய்வதோடு மட்டுமல்லாமல் , ஒரு சில உணவு வகைகளையும் சேர்த்து சாப்பிடுவதாலும், எளிதில் மனஅழுத்தத்திலிருந்து எளிதில் விடுபட முடியும்.


மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக, யோகா போன்ற பயிற்சிகள் செய்வதோடு மட்டுமல்லாமல், ஒரு சில உணவு வகைகளை சாப்பிடுவதால் எளிதில் விடுபடுவதால், அந்த உணவுகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:


தயிரை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதால் அதிக சத்து நிறைந்ததாகவும், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை தரக்கூடியதாகவும், இருக்கிறது. மேலும் தயிரில் உள்ள டைரோசைன் என்னும், புரோட்டீன் மூளையில் உள்ள செரடோன், நியூரோ ஹார்மோன் அளவை அதிகரிப்பதால் , மன அழுத்தத்தை உருவாக்கிவிடும் நரம்புகளை அமைதியடையச் செய்கிறது


டார்க் சாக்லேட்:


நாள்தோறும் டார்க் சாக்லேட்டை அதிகம் சாப்பிட்டுவருதால்,அதில் உள்ள ப்ளேவோனாய்டு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும்  தான் மனஅமைதி அதிமாகி மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது . டார்க் சாப்பிடுவதால் அதிலுள்ள இனிப்பு சுவையானது அதிக அளவு இருப்பதால், குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.


சிட்ரஸ் பழங்கள்:


பழங்களை நாள்தோறும் சாப்பிட்டு வருவதால் இதில் உள்ள இயற்கையான இனிப்பு தண்மை, ருசிமிகுந்ததாகவும்,  மனதை அமைதியடையச் செய்யவும் சிட்ரஸ் பழங்கள் உதவுகிறது. அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடம்பிலுள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.


பாதாம்:


பாதாம் பருப்பை உற வைத்தோ அல்லது அப்படியே  சாப்பிடுவதால், இதில் உள்ள வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற உட்டசத்துக்கள் இருப்பதால், இது உடல் ஆரோக்கியம் மேம்பட செய்வதோடு, மன அழுத்ததிலிருந்து விடுபடவும் உதவுகிறது.