tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
டீ வியாபாரம் பாதிப்பு.. முதல்வர் கார் மீது.. டம்ளர் விட்டு எறிந்த டீ மாஸ்டர்!!
டீ வியாபாரம் பாதிப்பு.. முதல்வர் கார் மீது.. டம்ளர் விட்டு எறிந்த டீ மாஸ்டர்!!

டீ வியாபாரம் பாதிப்பு.. முதல்வர் கார் மீது.. டம்ளர் விட்டு எறிந்த டீ மாஸ்டர்!!

tea-glass-thrown-16467158653x2-down-1646725547

நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் முக ஸ்டாலின் சென்ற காரின் மீது டீ மாஸ்டர் சில்வர் குவளையை  வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றார். காவல்கிணறு அருகே டீ மாஸ்டர் பாஸ்கர்  கிளாஸை  எறிந்ததோடு  பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


டீ வியாபாரம் பாதிப்பு.. முதல்வர் கார் மீது.. டீ கிளாஸை விட்டு எறிந்த டீ மாஸ்டர்!!


திருநெல்வேலி: முதல்வர் ஸ்டாலின் சென்ற வாகனத்தின் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.. இதையடுத்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.


தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி அலுவலகம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்..


பிறகு, தனியார் உரத்தொழிற்சாலையில் 22 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். தொடர்ந்து ஆயிரம் கோடி மதிப்பிலான அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.. முன்னதாக, நெல்லை மாவட்ட காவல் கிணறு எல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.. நெல்லை தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் இந்த வரவேற்பு தடபுடலாக அளிக்கப்பட்டது...


காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் ஸ்டாலினின் கார் அப்போது வந்து கொண்டிருந்தது.. அந்த நேரம் பார்த்து, திடீரென ஒரு டீ கிளாஸ் முதல்வர் காரின் மீது வந்து விழுந்தது.. அங்கிருந்த டீக்கடை மாஸ்டர்தான் அந்த சில்வர் கிளாஸ் ஒன்றை எறிந்துள்ளார்.. இதனால் அவரை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் முயன்றனர்.. ஆனால், அந்த வழியாக சென்ற ஒரு பஸ்ஸில் ஏறி அவர் தப்பி சென்றுவிட்டார்..


அதற்குள் இந்த சம்பவம் குறித்து அறிந்த திமுக பிரமுகர்கள் அந்த டீ கடையை முற்றுகையிட்டு விட்டனர். மாவட்ட எஸ்பி சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த டீ கடையை மூட உத்தரவிட்டனர்... விசாரணையில் அந்த நபர் பெயர் பாஸ்கர் என்பதும், பணகுடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.. இந்த டீ கடையை திறந்து ஒரு வாரம்தான் ஆகிறதாம்.. இந்த கடையில் 2 நாட்களுக்கு முன்புதான் டீ மாஸ்டராக பாஸ்கர் வேலைக்கு சேர்ந்தாராம்...


இதையடுத்து முதல்வர் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மீது குவளையை வீசியதாக பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.. அத்துடன் டீ மாஸ்டர் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால், அவர் காவல்கிணறு பக்கம் வராமலேயே இருந்தார்.. இந்நிலையில், மறுபடியும் டீ கடைக்கு வேலைக்கு இன்று வந்தார்.. அங்கிருந்த போலீசார் அவரை கைது செய்தனர்...


ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போது, டீ குடிக்க நின்ற மக்களை போலீசார் விரட்டி விரட்டி அடித்ததாகவும், இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில்தான் டீ கிளாஸை எடுத்து வீசியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்... தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது... இந்த சம்பவத்தினால் காவல்கிணறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.