tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
போலீஸ் இனி CLAPP மூலம் லீவ் கேட்கலாம்; தமிழக முதல்வர் தொடங்கி வைத்த APP எப்படி செயல்படும்?
amilnadu-cm-police-launches-clapp-for-tn-police

சென்னை பெருநகர காவல் என்பது 5800 ஆயுதம் தாங்கிய காவலர்களைக் கொண்டுள்ள பிரிவு. இங்கு காவலர்கள் விடுப்பு கேட்டு அனுமதி பெறும் நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனை சரி செய்யும் பொருட்டு இனி எளிதாக விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட TN Police CLAPP (Complete Leave Appலிகேஷன்) என்கிற விடுப்பு செயலியை முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்தார். காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிட்டு வந்தார். அந்த வகையில் இன்றைக்கு வெளியிடப்பட்டள்ள செயலி காவலர்கள் எளிதாக விடுப்பு பெற உதவும். காவலர்கள் விடுப்புக்கு அனுமதி வேண்டி இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆப்பில் விண்ணப்பித்த மூன்று மணிநேரத்திற்குள் அவர்களுக்கான மேலதிகாரி விண்ணப்பத்தைச் சரிபார்ப்பார். மூன்று மணிநேரத்திற்குள் சரிபார்க்கவில்லையென்றால் அதற்கு மேல் படிநிலையில் உள்ள அதிகாரிக்கு விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்படும்.


இரவு பகல் பாராது பணியில் இருக்கும் காவலர்கள் ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, வாராந்திர அனுமதி விடுப்பு, தற்செயல் விடுப்பு போன்றவற்றிற்கு இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். செயலி முழுமையாக தயாராக உள்ளது. காவலர்கள் தங்களது மொபைலில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக தொடங்கலாம். இது காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநில ஆணையர் ஷங்கர் ஜிவால் குறிப்பிடும் போது, "இந்தச் செயலி காவலர்கள் விடுப்புக்காக காத்திருப்பதைத் தவிர்க்கவும் விடுப்பு வழங்குவது வெளிப்படைத்தன்மையாக இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் அமையும்" என்கிறார்.



மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பிரதமர் திரு @நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தமிழக அரசுக்கும், மக்களுக்கும் மிகுந்த கவலையளிக்கும் விஷயமாக இருப்பதால், தமிழகத்தின் அட்டவணையை சேர்க்க தலையிட்டு ஏற்பாடு செய்யுமாறு மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.




இவ்வாறு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்