tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி
பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி

பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி

Tamil_News_large_2991336

உடுமலை :உடுமலை அருகே கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, தீக்குளிப்பு முயற்சி, தடியடி,தள்ளுமுள்ளு என பல மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு, பரபரப்பு நிலவியது.


திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், 22 வீடுகளை அகற்றினர்.தொடர்ந்து, அங்கிருந்த ஆதிகருவண்ணராயர் வீரசுந்தரி கோவிலை இடிக்க சென்ற போது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


'ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோவில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. நீர் வழித்தடத்திற்கும், கோவிலுக்கும் தொடர்பு இல்லை. மின் இணைப்பு, வரி செலுத்துவது உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. கோவிலை இடிக்க அனுமதிக்கமாட்டோம்' என எதிர்ப்பு தெரிவித்தனர்.


அதிகாரிகளும், போலீசாரும் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க, ஒரு கி.மீ., துாரத்திற்கு முன், பிரதான வாயிலை அடைத்து உள்ளே நுழைய விடாமல், பெண்கள், ஆண்கள் என, 500க்கும் மேற்பட்டோர் தடுத்தனர். போலீசார் தடியடி நடத்தியும், விலகாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அங்கிருந்த சிலர் கெரசினை தங்கள் மேல் ஊற்றிக்கொண்டு, தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என எச்சரித்தனர்.


அருகிலிருந்த போலீசார் மீதும் கெரசின் விழுந்ததால், தீயணைப்பு துறை வாகனத்தால் தண்ணீர் அடிக்கப்பட்டது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக, அதிகாரிகளும், போலீசாரும் முயன்றும் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. இதையடுத்து, திருப்பூர் எஸ்.பி., சசாங் சாய், ஆர்.டி.ஓ., கீதா ஆகியோர் மக்களிடம் பேச்சு நடத்தினர்.


இதில், ஏப்., 10 வரை அவகாசம் வழங்கப்படும். அதற்குள், உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, இடிப்பு நடவடிக்கையை தவிர்த்து கொள்ள அறிவுரை வழங்கினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பிச்சென்றனர்.