tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
நெதர்லாந்து நிறுவனத்தை மொத்தமாக சுருட்டிய முகேஷ் அம்பானி.. எத்தனை கோடி தெரியுமா..?
நெதர்லாந்து நிறுவனத்தை மொத்தமாக சுருட்டிய முகேஷ் அம்பானி.. எத்தனை கோடி தெரியுமா..?

நெதர்லாந்து நிறுவனத்தை மொத்தமாக சுருட்டிய முகேஷ் அம்பானி.. எத்தனை கோடி தெரியுமா..?

litjium

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி கச்சா எண்ணெய் விலையை உயர்வைப் பயன்படுத்தி அதிக லாபத்தையும், வருமானத்தையும் பெற வேண்டும் என்பதற்காகப் பிரிட்டன் நாட்டிற்குக் கூடுதலான டீசல்-ஐ ஏற்றுமதி செய்வதற்கான பணிகளில் பிசியாக இருந்தாலும், தொடர்ந்து கிரீன் எனர்ஜி துறையைக் கூடுதலான கவனிப்பில் வைத்துள்ளார்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது கிரீன் எனர்ஜி துறையைத் தான் மிகவும் முக்கியமானதாகக் கொண்டு இயங்கி வருகிறது. இதற்குக் காரணம் அடுத்த 50 வருடத்திற்கு ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை நிர்ணயம் செய்யப்போவது கிரீன் எனர்ஜி துறை தான்.


இதனால் இப்பிரிவு வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து நிறுவனங்களைக் கைப்பற்றி வரும் முகேஷ் அம்பானி இன்று நெதர்லாந்து நிறுவனத்தையும் மொத்தமாகக் கைப்பற்றியுள்ளார்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி லிமிடெட் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த Lithium Werks BV என்னும் நிறுவனத்தை மொத்தமாகக் குறிப்பாக இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வைத்திருந்த பணத்தையும் சேர்த்து சுமார் 61 மில்லியன் டாலர் அதாவது 468.2 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.


Lithium Werks BV நிறுவனம் கோபால்ட் இல்லாத ஹைய் பர்பாமென்ஸ் லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரி-ஐ தயாரிப்பதில் முன்னோடியாக உள்ளது. தற்போது சந்தையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான பேட்டரிகளில் மிகவும் முக்கியமானது லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரி தான், அதிலும் Lithium Werks நிறுவனத்தின் இந்தப் பேட்டரிகள் நீண்ட காலம் உழைக்கக் கூடியவை.


Lithium Werks நிறுவனத்தின் இந்தப் பேட்டரிகளில் கோபால்ட் மற்றும் நிக்கல் இல்லாத காரணத்தால் மிகவும் குறைந்த விலையில் பேட்டரிகள் தயாரிக்க முடியும் என்பது தான் மிகவும் ஸ்பெஷலான விஷயம். இந்திய சந்தைக்கும் இதுபோன்ற தொழில்நுட்பம் தான் வேண்டும் என்பதால் முகேஷ் அம்பானி இந்நிறுவனத்தை மொத்தமாக வாங்கியுள்ளார்.


Lithium Werks நிறுவனத்திற்குச் சொந்தமாகச் சீனாவில் உற்பத்தி தொழிற்சாலையும், உல்ளது. இது மட்டும் அல்லாமல் சீனாவில் பல வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஊழியர்களும் உள்ளது. இந்தத் தொழிற்சாலையையும் தற்போது ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் மாதம் பிரிட்டன் நாட்டின் Faradion நிறுவனத்தை 100 மில்லியன் பவுண்ட் தொகைக்குக் கைப்பற்றியது. தற்போது கைப்பற்றப்பட்டு உள்ள Lithium Werks நிறுவனத்துடன் இணையும் போது இப்பிரிவு தொழில்நுட்பம், வர்த்தகம், தரம், உற்பத்தி மிகப்பெரிய அளவில் மேம்படும்.