tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
ராகுல் பேச்சு அபத்தத்தின் உச்சம்; திமுகவின் முத்தையா பிரிவினைவாத கோரிக்கைக்கு உயிரூட்டியுள்ளது :சுப்ரமணியன்சுவாமி கடும் கண்டனம்
ராகுல் பேச்சு அபத்தத்தின் உச்சம்; திமுகவின் முத்தையா பிரிவினைவாத கோரிக்கைக்கு உயிரூட்டியுள்ளது :சுப்ரமணியன்சுவாமி கடும் கண்டனம்

ராகுல் பேச்சு அபத்தத்தின் உச்சம்; திமுகவின் முத்தையா பிரிவினைவாத கோரிக்கைக்கு உயிரூட்டியுள்ளது :சுப்ரமணியன்சுவாமி கடும் கண்டனம்

ராகுல் லோக்சபாவில் பேசியது முழுதும் அபத்தத்தின் உச்சம். அவர் இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படாத விஷயங்களை லோக்சபாவில் பேசியபோதே அதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும். பிரதமர் மோடி ஏன் அதை செய்யவில்லை என்பது புரியவில்லை.


ராகுலை பொறுத்தவரை அவருக்கு வரலாறும் தெரியாது; சட்டமும் தெரியாது.


அவர் எதையும் படிக்கவும் மாட்டார்; படித்தவர் கூறினாலும் கேட்கவும் மாட்டார். சிறுபிள்ளைத்தனமாக மனதில் பட்டதை பேசுவது போல எதையோ லோக்சபாவில் உளறியுள்ளார். இந்தியா உருவான பின்னணி அரசியல் சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து விரைவிலேயே அவருக்கு சொல்லி கொடுக்கப்படும்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி அதற்கு விளக்கமாக அரசியல் சட்டத்தில் கூறப்படாத விஷயங்களை பேசினர். இன்றளவிலும் மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என கூறி வருகின்றனர்.


அப்போதே பா.ஜ. தரப்பில் சரியான பதிலடி கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் போனதன் விளைவுதான் இன்றைக்கு பார்லிமென்ட் வரை பிரச்னையை எடுத்து வந்திருக்கின்றனர்.இதே பிரச்னையை ராகுலோ அவரது கட்சி தலைவர்களோ ராஜ்யசபாவில் பேசியிருந்தால் அங்கே உறுப்பினராக இருக்கும் நான் உடனடியாக தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்.

அரசியல் சட்டத்தில் கூறப்படாத ஒரு விஷயத்தை ராகுல் பேசுவதும் பிரிவினைவாதம் தான்.


அவரது பேச்சை கூர்ந்து நோக்கினால் இது புரியும்.ராகுலின் இந்த பிரிவினைவாத பேச்சுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி சொல்வதும் காங். பதில் நன்றி சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது. எப்படியோ விளைவுகள் மோசமாக தான் இருக்க போகின்றன.


இப்படிப்பட்ட பிரிவினைவாத பேச்சு மற்றும் நடவடிக்கைகளுக்காக தான் ஏற்கனவே தமிழகத்தில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது; அதை உணராதவர் அல்ல ஸ்டாலின்.இதை ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே நடந்தது தான் மீண்டும் நடக்கும்.'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்கு கொடுக்க முடியாது என்று துவக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன்.


ஆனால் அதை விடாப்பிடியாக பிடித்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசு இப்போது அதே பிரச்னையை ராகுல் வாயிலாக பார்லிமென்ட் வரை எடுத்து வந்திருக்கிறது.

நீட் தேர்வு விஷயத்தில் காங். இரட்டை வேடம் போடுவது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இதை லோக்சபாவில் ராகுல் பேசிய மறு வினாடியே பா.ஜ. உறுப்பினர்கள் தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டதாலேயே இப்போது ராகுலும் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்டிருக்கின்றனர்.



தி.மு.க.வும் காங்கிரசும் திட்டமிட்டு மத்திய பா.ஜ. அரசுக்கு எதிராக பார்லிமென்ட் வரை வந்திருப்பதை அறிந்த பின் தொடர்ந்து அதை அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் பா.ஜ. மற்றும் பிரதமர் மோடியின் எதிர்வினைக்காக காத்திருக்கிறேன்.அவர்கள் எதிர்வினையாற்றாத பட்சத்தில் இந்த சாமி களம் இறங்குவேன். அப்போது எல்லாமே அதிரடியாக இருக்கும்.இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்