தமிழ்நாடு முதலமைச்சர் போதை பொருள் இல்லா தமிழ்நாடு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியினை சென்னையில் தொடங்கி வைத்ததன் அடிப்படையில் திருவள்ளுா் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பேரின்பச்செல்வி தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெரியபாளையம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழ்நாடு உருவாக மாணவர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும் மாணவர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆ.சக்திவேலு ,உதவி தலைமையாசிரியர், பெரியபாளையம் காவல் உதவி ஆய்வாளர் ராஜு, மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.