tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
நல்லாட்சியில் மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி
நல்லாட்சியில் மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு: பிரதமர் மோடி

புதுடில்லி: நல்லாட்சி வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


பல்வேறு மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்

அப்போது பிரதமர் பேசியதாவது: நல்லாட்சியில் மாவட்ட நிர்வாகங்களுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. திட்டங்களை சிறந்த முறையில் அமல்படுத்தவும் உதவுகிறது. களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வது குறித்து விரிவான வழிமுறைகள் வெளியிடப்படும். ஒரு மாவட்டங்களின் வெற்றியில் இருந்து மற்ற மாவட்டங்கள் பாடம் கற்று கொள்வதுடன், தங்கள் முன் உள்ள சவால்களை மதிப்பீடு செய்ய வேண்டும். மேல்மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையிலும் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரையிலும் அரசின் செயல்பாட்டை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும் பொது மக்களுக்கும் இடையே நேரடியான தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.