முடி உதிர்தல் என்பது பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது பொதுவாக, குளிர்காலத்தில் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனை ஏற்படும். வீட்டில் நீங்கள் எங்கு பார்த்தாலும் உங்கள் முடிகளை காண்கிறீர்களா? இது ஏற்கனவே மன அழுத்தத்துடன் இருக்கும் உங்கள் வாழ்க்கையை மேலும் மேலும் மன அழுத்தமாக்குகிறது. குளிர்காலம் குறிப்பாக முடியில் பல பிரச்சனைகளை உருவாக்கலாம். ஏனெனில், குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரையே நாம் குளிக்க பயன்படுத்துகிறோம். வெதுவெதுப்பான நீர் முடியின் அனைத்து ஈரப்பதத்தையும் நீக்கி, உலர்ந்த மற்றும் உடையக்கூடியதாக ஆக்குகிறது.
#1
ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் ஷாம்பு, ஆமணக்கு எண்ணெய், கிளிசரின் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும். ஈரமான முடி மற்றும் உச்சந்தலையில் இந்த ஹேர் பேக்கை தடவுங்கள். 10-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு லேசான ஷாம்புவை தேய்த்து முடியை அலசுங்கள்.
#2
ஒரு வாழைப்பழம், 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றையும் சேர்த்து கெட்டியான பேஸ்டாக அரைக்கவும். இப்போது அதை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவவும். 20-30 நிமிடங்களுக்கு பின்னர் தலைமுடியை நன்றாக அலசவும்.
#3
குளிர்காலம் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியை உலர்த்தும் என்பதால், உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தொடர்ந்து எண்ணெய் தடவ வேண்டும். சூடான ஆர்கானிக் ஆமணக்கு எண்ணெயுடன் 2 துளிகள் லாவெண்டர் மற்றும் ரோஸ்மேரி அத்தியாவசிய எண்ணெய்களை சேர்த்து பயன்படுத்தவும். மேலும், சிறந்த ஊட்டச்சத்திற்காக உங்கள் தலைமுடியின் வேர்களில் இந்த எண்ணெயை மசாஜ் செய்யவும். எண்ணெய் ஊறவைக்க உங்கள் தலைமுடியை துண்டால் மூடவும்.