tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு.. ஓமந்தூரார் வளாகத்தில்.. கோலாகலத்தில் திமுக!
சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு.. ஓமந்தூரார் வளாகத்தில்.. கோலாகலத்தில் திமுக!

சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு.. ஓமந்தூரார் வளாகத்தில்.. கோலாகலத்தில் திமுக!

karunanithi

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இன்று மாலை திறக்கப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சிலையைத் திறந்து வைக்கிறார். இதையொட்டி திமுகவினர் விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றனர்.


முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இந்த வருடம் அதை சிறப்பாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து கருணாநிதி பிறந்த நாளை அரசே கொண்டாடும் என்றும், ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலை திறக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.


அதன்படி தற்போது ஓமந்தூரார் வளாகத்தில் முழு உருவ கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கவுள்ளார். கலைவாணர் அரங்கில் விழா நடைபெறவுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கருணாநிதி சிலை திறப்புக்கு பெரும் திரளாக திமுகவினர் திறண்டு வர வேண்டும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதால் திமுகவினர் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.


அண்ணா அறிவாலயம் வளாகத்தில் ஏற்கனவே முழு உருவ கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அதே போன்ற வடிவமைப்பில்தான் ஓமந்தூரார் வளாக கருணாநிதி சிலையும் உள்ளது. மறைந்த தலைவர் கருணாநிதி, சட்டசபையில் பொன் விழா கண்ட மூத்த உறுப்பினரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.