tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
கட்டுக்கட்டாக பணத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கைது
கட்டுக்கட்டாக பணத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கைதுதுர்யமாக உயிர் பிழைத்த பள்ளிச் சிறுமி!

கட்டுக்கட்டாக பணத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கைது

screenshot17352-1659259935

கோல்கட்டா : ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் காரில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஸ், கொங்காரி ஆகிய எம்.எல்.ஏ.,க்கள், நேற்று மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவுக்கு காரில் வந்தனர். அவர்கள் ஏராளமான பணத்துடன் வருவதாக மேற்கு வங்க போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


ஹவுரா அருகே அவர்களது காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை எண்ணும் பணி நடந்து வருகிறது. மூன்று எம்.எல்.ஏ.,க்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் 

இந்தநிலையில், மேற்கு வங்காளத்தில் பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்ஷப், நமன் பிக்சல் ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே கூறுகையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கண்ட 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்' என்றார். மேலும் அவர் கூறுகையில், 'எல்லோரை பற்றிய தகவல்களும் எங்களிடம் உள்ளது. இனி வரும் நாட்களில் அது யாராக இருந்தாலும், குறிப்பாக கட்சியின் மேல் பொறுப்பில் உள்ளவர்களாயினும், அடிமட்டத்தில் இருப்பவர்களாகியினும் அவர்கள் மீது குற்றம் கண்டறியப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்" என்றார்.