இந்தியாவின் 14வது குடியரசு துணைத்தலைவராக மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர் பதவியேற்றார். ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தன்கருக்கு (71) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தன்கர் கடவுள் பெயரில் இந்தியில் உறுதிமொழி ஏற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
3 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
இந்தநிலையில், மேற்கு வங்காளத்தில் பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்ஷப், நமன் பிக்சல் ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே கூறுகையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மேற்கண்ட 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்' என்றார். மேலும் அவர் கூறுகையில், 'எல்லோரை பற்றிய தகவல்களும் எங்களிடம் உள்ளது. இனி வரும் நாட்களில் அது யாராக இருந்தாலும், குறிப்பாக கட்சியின் மேல் பொறுப்பில் உள்ளவர்களாயினும், அடிமட்டத்தில் இருப்பவர்களாகியினும் அவர்கள் மீது குற்றம் கண்டறியப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
