tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
கோப்பை வென்றது இந்தியா * ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி
கோப்பை வென்றது இந்தியா * ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி

கோப்பை வென்றது இந்தியா * ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி


India cup M_5

ஆமதாபாத்: விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று அசத்தியது இந்தியா. மூன்றாவது போட்டியில் 96 ரன்னில் வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3–0 என கைப்பற்றியது.


இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மோடி மைதானத்தில் நடந்தன. முதல் இரு போட்டியில் வென்ற இந்திய அணி 2–0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி போட்டி நேற்று நடந்தது.


‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராகுல், சகால், தீபக் ஹூடா, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ், குல்தீப் யாதவ், தீபக் சகார் சேர்க்கப்பட்டனர். விண்டீஸ் அணியின் கேப்டன் பொறுப்பை பூரன் ஏற்றார். 


இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. போட்டியின் 4வது ஓவரை வீசிய அல்ஜாரி ஜோசப், அதிர்ச்சி கொடுத்தார். 3வது பந்தில் ரோகித் சர்மாவை (13) அவுட்டாக்கினார். அடுத்த 2வது பந்தில் ‘சீனியர்’ கோஹ்லியை ‘டக்’ அவுட்டாக்கினார். தவானும் (10) நிலைக்கவில்லை.


பின் ஸ்ரேயாஸ், ரிஷாப் பன்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஸ்ரேயாஸ் 9வது, ரிஷாப் 5 வது அரைசதம் அடித்தனர். 4 வது விக்கெட்டுக்கு 110 ரன் சேர்த்த போது ரிஷாப் (56) அவுட்டானார். சூர்யகுமார் (6) வந்த வேகத்தில் வெளியேறினார். ஸ்ரேயாஸ் 80 ரன் எடுத்து கைகொடுத்தார்.


பின் வரிசையில் தீபக் சகார், வாஷிங்டன் சுந்தர் இணைந்தனர். 2016க்குப் பின் சர்வதேச அரங்கில் எதிர்கொண்ட ஒவ்வொரு 6 பந்துக்கும் ஒரு பவுண்டரி அடித்த சகார், நேற்றும் தனது அசத்தலை தொடர்ந்தார். வால்ஷ் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்த சகார் 38 ரன் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.


குல்தீப் (5) நீடிக்கவில்லை. கடைசியில் வாஷிங்டன் சுந்தர் (33), சிராஜ் (4) அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 265 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹோல்டர் 4, ஜோசப் 2, வால்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.


விண்டீஸ் அணிக்கு துவக்கம் மீண்டும் மோசமாக அமைந்தது. ஹோப் (5), பிராவோ (19) அவுட்டாக, கிங் (14), புரூக்ஸ் (0), சகாரிடம் சிக்கினர். ஹோல்டரை (6) பிரசித் கிருஷ்ணா திருப்பி அனுப்பினார். பூரன் 34 ரன் எடுத்தார். விண்டீஸ் அணி 82 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.


ஓடீன் ஸ்மித் 18 பந்தில் 36 ரன் எடுத்து அவுட்டானார். வால்ஷ் (13), ஜோசப் (29) அவுட்டாக, விண்டீஸ் அணி 37.1 ஓவரில் 169 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் சிராஜ், பிரசித் தலா 3, தீபக் சகார், குல்தீப் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.


96 ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது.