tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?
அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?

அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?

1649697174596-down-1652263364-1653727466

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது.


2020-ம் ஆண்டு கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 8.9 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே 2022-ம் ஆண்டு மே மாதம் 105.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


மும்பைக்கு 17 வயதில் வைரம் விற்பனை செய்யும் தரகராக வந்த கவுதம் அதானி அடுத்த 3 வருடத்தில், தனது வயது 20 ஆகும் போதே லட்சாதிபதியாக உருவாகினார்.


1988-ம் ஆண்டு, 26 வயதாகும் போது ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்ய அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்கள் உள்பட அதானி குழுமம் உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது.


ஆதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் மதிப்பு 2022, பிப்ரவரி மாதத்தின் படி 40 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. சென்ற 3 ஆண்டுகளில் அதன் மதிப்பு 5,500 சதவீதம் அதிகரித்துள்ளது.


அதான் போர்ட்ஸ் கிழக்கு மற்று மேற்கு இந்தியாவின் 13 முக்கிய சிறு துறைமுகங்களை இயக்கும் நிறுவனமாக உருவாகியுள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய நிலக்கரி வர்த்தகம் மற்றும் நிலக்கரி ஒப்பந்ததாரராக அதானி எண்டர்பிரைசஸ் உள்ளது. ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தின் ஒப்பந்தம் அதானி எண்டர்பிரசஸிடம் உள்ளது. மேலும் 8 விமான நிலையங்களை இயக்கும் ஒப்பந்தத்தையும் அதானி எண்டர்பிரைசஸ் பெற்றுள்ளது.


மும்பை உள்ளிட்ட நகரங்களில் எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனமாக அதானி கேஸ் உள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய அனல் மின் சக்தி உற்பத்தி நிறுவனமாக அதானி பவர் உள்ளது. அதற்கு பக்கபலமாக அதானி எண்டர்பிரைசசின் நிலக்கரி வர்த்தகம் உள்ளது.


இந்தியாவின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் மற்றும் அரிசி விற்பனை நிறுவனமாக அதானி வில்மர் உள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் சமையல் எண்ணெய் விலை வரலாறு காணாத விதமாக அதிகரித்த நிலையில், அதே நேரத்தில் அதானி வில்மர் நிறுவனத்தின் மதிப்பு 200 சதவீதம் அதிகரித்துள்ளது.


இந்தியாவில் ஹோல்சிம் நடத்தி வரும் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆகிய நிறுவன பங்குகளை 10.5 பில்லியன் டாலர் கொடுத்து அதானி குழுமம் அண்மையில் வாங்கியது. அதனால் ஒரே நாளில் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய நிறுவனமாக அதானி சிமெண்ட் உருவாகியுள்ளது.


சென்ற வாரம் அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் 1 லட்சம்ர் ரூபாய் முதலீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் லிமிடெட் (AHVL), மருத்துவம் மற்றும் நோயறிதல் வசதிகளை அமைத்தல் உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான வணிகத்தை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது


AMG மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் வாயிலாகப் பிப்ளிஷிங், விளம்பரம், பிராட்காஸ்டிங், கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் போன்ற பிரிவில் தீவிரமாக இறங்க உள்ளதாக அதானி குழுமம் அண்மையில் அறிவித்துள்ளது


உலக பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறி 6வது இடத்திற்கு சில வருடங்களில் சென்றுள்ள அதானி, விரைவில் உலகின் நம்பர் 1 பணக்காரராக உருவாகினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.