கூகுளில் இருந்த பெரிய ஓட்டை.. கண்டுபிடித்த 19 வயது இளைஞர்
பாட்னா: ரித்துராஜ் சவுத்திரி என்ற 19 வயது இளைஞர் கூகுளில் இருக்கும் குறைபாட்டை கண்டறிந்து சாதனை படைத்து உள்ளார், உலகில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் சர்ச் எஞ்சின் கூகுள் ஆகும். உலகின் நம்பர் 1 சர்ச் எஞ்சின் தற்போது கூகுள்தான்.
இது மிகவும் பாதுகாப்பானது என்றாலும் கூட எல்லா செயலிகளிலும், தளங்களிலும் இருப்பது போல இதிலும் சில பக்ஸ் இருக்கும். அதாவது சில கோடிங் குறைபாடுகள், அல்லது மாற்ற வேண்டிய பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும்.
இது போன்ற குறைபாடுகளை களையவே கூகுள் அடிக்கடி தனது கோடிங்கை அப்டேட் செய்து வரும். அதேபோல் புதிய பாதுகாப்பு அம்சங்களை புகுத்தி வரும். சமயங்களில் கூகுள் பயனாளிகள் சிலரும் கூட கூகுளில் இருக்கும் இது போன்ற குறைகளை கண்டறிந்து அதை சுட்டிக்காட்டுவது வழக்கம். அதாவது உங்கள் செயலியில், தளத்தில் இந்த சிக்கல் உள்ளது.
அதை நிவர்த்தி செய்யுங்கள் என்று சில பயனாளிகள் கூறுவது வழக்கம். இந்த நிலையில்தான் ரித்துராஜ் சவுத்திரி என்ற பீகாரை சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவர் கூகுளில் இருக்கும் குறைபாட்டை கண்டறிந்து உள்ளார். இவர் மணிப்பூரில் இருக்கு ஐஐடியில் படித்துவருகிறார் . பிடெக் படித்து வரும் இவர் கணினி பொறியியல், சைபர் பாதுகாப்பில் ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில் கூகுள் சர்ச் எஞ்சினில் இருக்கும் பக்ஸ் ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளார். இந்த பக்ஸ் மூலம் கூகுளில் எளிதாக ஹேக்கர்கள் தாக்குதல்கள் நடத்தி இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பக்ஸை கண்டுபிடித்த நிலையில் ரித்துராஜ் அதை பற்றி கூகுளிடம் தெரிவித்துள்ளார். இதை கூகுளும் சோதனை செய்துள்ளது. சோதனையின் முடிவில் அதில் பக்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கூகுளும் குறைபாட்டை ஒப்புக்கொண்டு உள்ளது. இந்த பக்சை வேறு ஹேக்கர்கள் கண்டுபிடித்து இருந்தால் அது பெரிய சிக்கலில் முடிந்து இருக்கும். இது ஒரு விதத்தில் கொஞ்சம் பெரிய குறைபாடுதான் என்று கூகுள் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் பக்ஸ் கண்டுபிடித்த ரித்துராஜூக்கு கூகுள் பாராட்டு தெரிவித்துள்ளது. அதோடு புதிய திருப்பமாக அவருக்கு Google Hall of Fame Award விருது வழங்கி உள்ளது.
மேலும் கூகுள் ஆராய்ச்சியாளர் என்ற பட்டியலில் இவரின் பெயரை கூகுள் சேர்த்து உள்ளது.இந்த நிலையில் கூகுளில் இருக்கும் மேலும் சில குறைபாடுகளை இவர் கண்டுபிடிக்கும் திட்டத்தில் உள்ளார். இப்போது இவர் P-2 எனப்படும் இரண்டாம் கட்ட குறைபாடுகளை கண்டுபிடித்துள்ளார். P-0 எனப்படும் இதை விட மேம்பட்ட குறைபாடுகளை இவர் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அவருக்கு கூகுளில் வேலை அல்லது பண ரீதியான வெகுமானங்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.