சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து விற்பனையாகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து விற்பனையாகிறது. 24 காரட் 99.99 தூயத் தஙகத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5292 என நிர்ணயிக்கப்பட்டு 8 கிராம் ரூ.42336க்கு விற்கப்படுகிறது.
ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.39120 ஆக உள்ளது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 10 நாள்களில் சவரனுக்க ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்து காணப்படுகிறது.
வெள்ளி விலை
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து சவரன் ரூ.40 உயர்ந்துள்ளது. வெள்ளியை பொறுத்தமட்டில் ஆக.9ஆம் தேதி ஒரேயடியாக கிராமுக்கு ரூ.1.50 காசுகள் அதிகரித்து கிலோ பார் வெள்ளி ரூ.64,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது வெள்ளி விலை சீராக குறைந்து கிராம் ரூ.64 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.64 ஆயிரமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டர் ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24ஆகவும் தொடர்கிறது.
நாட்டின் மற்ற நகரங்களில் சரக்கு சேவை வரி மற்றும் இதர வரிகள் நீங்கலாக 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
மும்பை ரூ.47,350
டெல்லி ரூ.47,550
கொல்கத்தா ரூ.47,350
பெங்களுரு ரூ.47,400
ஹைதராபாத் ரூ.47,350
கேரளம் ரூ.47,350
அகமதாபாத் ரூ.47,400
ஜெய்ப்பூர் ரூ.47,550
லக்னோ ரூ.47,550
பாட்னா ரூ.47,380
புவனேஸ்வர் ரூ.47,350
சண்டிகர் ரூ.47,550
ரக்ஷா பக்தன் தினமான நேற்று (ஆக.11) தங்கம் விலை அமெரிக்க வங்கிகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சற்று குறைற்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.