tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
கவர்னர் உரை தேவையில்லை!” தெலங்கானா அரசு எடுத்த முக்கிய முடிவு.. கவர்னர் ‛கிள்ளுக்கீரை’ அல்ல டென்ஷனான ஆளுநர் தமிழிசை!
கவர்னர் உரை தேவையில்லை!" தெலங்கானா அரசு எடுத்த முக்கிய முடிவு.. கவர்னர் ‛கிள்ளுக்கீரை' அல்ல டென்ஷனான ஆளுநர் தமிழிசை!!

கவர்னர் உரை தேவையில்லை!" தெலங்கானா அரசு எடுத்த முக்கிய முடிவு.. கவர்னர் ‛கிள்ளுக்கீரை' அல்ல டென்ஷனான ஆளுநர் தமிழிசை!!

tamilisai441-1643187935

மேற்கு வங்கம், கேரளா, தமிழக முதல்வர்களை அடுத்து, தெலுங்கானா முதல்வரும், அம்மாநில கவர்னரோடு மல்லுக்கட்ட துவங்கி உள்ளார். மற்ற மூன்று மாநிலங்களிலாவது முதல்வர்களுக்கும், கவர்னர்களுக்கும் நேரடியாக, 'ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?' என்ற மோதல் இருந்தது.


தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும், முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் நேரடி மோதல் எதுவும் கிடையாது. வாய்க்கால், வரப்பு தகராறும் கிடையாது.அப்படி இருந்தும், தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரை, கவர்னர் தமிழிசையின் உரையின்றி துவக்க, முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளாராம்.


ரமணா படத்தில் யூகிசேது, காவல்துறை உயர் அதிகாரியான சிங்கிடம், 'இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும்' என்று ஐடியா கொடுத்து, காவலில் வைத்துள்ள விஜயகாந்தின் ஆதரவாளர்களை, அவர்களின் பெற்றோர் முன்னிலையில், நையப்புடைக்கும்படி தெரிவிப்பார். அதுபோல சமீபகாலமாக, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வை, சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார்.


பா.ஜ.,வுக்கும், பிரதமர் மோடிக்கும், 'பாடம் கற்பிக்க' சட்டசபை கூட்டத்தொடரை, கவர்னர் தமிழிசையின் உரையின்றி துவக்க இருக்கிறாராம்.இப்படிப்பட்ட அறிவாளிகளுக்கு ஓட்டளித்து, ஆட்சியில் அமர்த்திய தெலுங்கானா மக்கள் தான், தங்களை நொந்து கொள்ள வேண்டும்.


'இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும்' என்ற பார்முலா எல்லாம், மத்திய அரசிடமோ, பிரதமர் மோடியிடமோ, பா.ஜ.,விடமோ எடுபடாது.சந்திரசேகர ராவுக்கு பாடம் புகட்டும் வகையில், தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போடத்துவங்கினால் என்ன செய்வார்?கவர்னர் தமிழிசை, அவ்வாறு செய்ய மாட்டார் என்பது வேறு விஷயம்.


ஆனால், அவரும், பா.ஜ., தலைமைக்கும், பிரதமர் மோடிக்கும் கட்டுப்பட்டவர் அல்லவா? சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா மிஸ்டர் சந்திரசேகர ராவ்?கவர்னர் ஒன்றும், உங்கள் தாளத்திற்கேற்ப நடனமாடும், 'கிள்ளுக்கீரை' அல்ல. அந்த உண்மையை தெளிவாக புரிந்து, நடந்து கொள்வது தெலுங்கானா மாநில முதல்வருக்கும், அந்த மாநில முன்னேற்றத்திற்கும் நல்லது.