tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
பாமக தலைவரானார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. சிறப்பு பொதுக்குழுவில் தேர்வு!
பாமக தலைவரானார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. சிறப்பு பொதுக்குழுவில் தேர்வு!

பாமக தலைவரானார் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.. சிறப்பு பொதுக்குழுவில் தேர்வு!

anbumani

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூடி இதை தீர்மானித்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி கடந்த 25 வருடமாக இருந்து வருகிறார். அவரது தலைமையிலும், டாக்டர் ராமதாஸின் வழி காட்டுதலிலும் பாமக வெற்றிகரமான கட்சியாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார். ராஜ்யசபா எம்.பியாகவும் இருக்கிறார். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

தற்போது ஜி.கே.மணிக்கு ஓய்வு கொடுத்து விட்டு டாக்டர் அன்புமணியை தலைவராக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. கட்சியினரின் கோரிக்கை, தொடர் வலியுறுத்தல் காரணமாக இந்த முடிவுக்கு பாமக தலைமை வந்துள்ளது. மேலும் ஜி.கே.மணியே, அன்புமணியை தலைவராக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இதையடுத்து இன்று திருவேற்காட்டில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டப்பட்டது.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஜி.கே.மணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் மணிக்கு வெகுவாக புகழாரம் சூட்டப்பட்டது. டாக்டர் அன்புமணி பேசும்போது, ராமதாஸுக்கு 2 மகன்கள். மூத்தவர் ஜி.கே.மணி, இளையவன் நான் அன்புமணி என்று கூறியபோது ஜி.கே.மணி பெரும் நெகிழ்ச்சி அடைந்தார்.

இன்றைய சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் வேலையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. குறிப்பாக எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையிலான சுற்றுப்பயணாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு திருவிழா உணர்வு காணப்பட்டது. அன்புமணி பெயரசை் சொன்னபோதெல்லாம் கூட்டத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் கையொலி எழுப்பி வந்தனர்.

முன்னதாக டாக்டர் அன்புமணியை தலைவராக்கும் தீர்மானத்தை தற்போதைய தலைவர் ஜி.கே.மணி வாசிக்க கூட்டத்தினர் ஆர்ப்பரித்து கைதட்டி அதை வரவேற்றனர். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்டிப் பிடித்து அணைத்து ஆசி கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக இதுவரை இருந்து வந்த ஜி.கே.மணி இன்று முதல் பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவராக தொடர்வார் என்றும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாமகவில் முக்கியப் பொறுப்பில் ஜி.கே.மணி தொடர்ந்து செயல்படவுள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்வது மருத்துவர் ராமதாஸ் அவர்களால் நிறுவப்பட்ட பாமக. அனைத்துத் தரப்பு மக்களின் கட்சியாக திகழும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் பதித்த முத்திரைகள், படைத்த சாதனைகள் ஏராளம். தமிழ்நாட்டு அரசுக்குப் புதிய திட்டங்களை வகுப்பதில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கும் கட்சியாகவும், மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும்போது, அதை எதிர்த்து முறியடிக்கும் கட்சியாகவும், மக்களுக்கான சிறந்த திட்டங்களை செயல்படுத்தும்போது அதை பாராட்டும் கட்சியாகவும் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்குண்டு.