tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
கச்சா எண்ணெய் விலை: ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி
கச்சா எண்ணெய் விலை: ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி

கச்சா எண்ணெய் விலை: ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி

Tamil_News_large_2978251

புதுடில்லி :கச்சா எண்ணெய் விலை, ஒரு பீப்பாய்க்கு 300 டாலர் வரை அதிகரிக்கும் என ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட, 23 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 127 டாலராக இருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, அமெரிக்கா தெரிவித்ததை அடுத்து, ரஷ்யா இவ்வாறு அறிவித்துள்ளது.


ரஷ்ய எண்ணெயை நிராகரிக்கும் பட்சத்தில், அது உலக சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பீப்பாய் 300 டாலருக்கும் அதிகமாக கூட விலை ஏறலாம் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியாவில், 1 லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 15 ரூபாய் வரை அதிகரித்தால் மட்டுமே, எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.