பட்ஜெட்டிற்குள் பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) கார்கள் வாங்குவது மற்றும் அதற்கு வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் கார்கள், சமூக அந்தஸ்து கொண்ட வாகனமாக மாறிவிட்டது. இதனால் பலரும் கார் வாங்கவே விரும்புகின்றனர். அதற்காக ஒரு பெரும் தொகையை முதலீடு செய்கின்றனர்.
இதனால் சில நேரங்களில் நிதி சிக்கல்களிலும் சிக்கிக் கொள்கின்றனர். இதை மாற்றி பட்ஜெட்டிற்குள் பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) கார்கள் வாங்குவது மற்றும் அதற்கு வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
செகண்ட் ஹேண்ட் வாகன கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பொதுவாக புதிய கார் விலை அதிகமாக இருக்கும். மேலும் வாகன காப்பீடு, பராமரிப்பு என தொடர்ச்சியாக கூடுதல் நிதி தேவைப்படலாம். ஆனால் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட காரில் அந்தச் சிக்கல் இல்லை. இதனை சந்தையில் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் வாங்கலாம். இதனால் உங்களுக்கு நிதி அழுத்தம் ஏற்படாது.
இதற்காக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன்பெற வாடிக்கையாளர் 21 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம்.
இது குறித்து பேங்க்பஸார்.காம் தலைமை செயல் அதிகாரி ஆதில் ஷெட்டி கூறுகையில், “இந்தக் கடன்கள் கடனுக்கான மதிப்பு, கிரெட்டி ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் கால அளவை நிர்ணயித்து கொடுக்கப்படுகிறது. பொதுவாக வங்கிகள் 5 ஆண்டுகள் வரை கடன் செலுத்த கால அளவு கொடுக்கப்படலாம். சில வங்கிகள் 7 ஆண்டுகள் வரை கால அளவுகளை வைத்துள்ளன” என்றார்.
கடன் அல்லாத மற்ற நிதி வாய்ப்புக்கள்
சுயநிதி அல்லது பழைய வாகனத்தை வாங்க கடன் வாங்குவதைத் தவிர, உங்களுக்கு வேறு நிதி விருப்பங்களும் உள்ளன. அதிக வட்டி மற்றும் கட்டணங்களைச் செலுத்த தயாராக இருந்தால், நீங்கள் பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற கடனைப் பெறலாம்.
மறுபுறம், நீங்கள் பாதுகாப்பான கடனை விரும்பினால், தங்கம் போன்ற சொத்துக்கள், கிஷான் விகாஸ் பத்திரம் (கேவிபி), தேசிய பத்திரங்கள் மீது கடன் மற்றும் வைப்புத் தொகை (FD) போன்ற பத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
மேலும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.80 சதவீத வட்டியில் தனிநபர் கடனும், தேசிய பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுக்கு 11.15 சதவீதம் கடனும் வழங்கப்படுகின்றன.
இதேபோல் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, எஸ்பிஐ மற்று; பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி முறையே தனிநபர் கடன்கள் 9.75, 10.95, 10.00, 10.40 சதவீத வட்டியில் கடன்கள் வழங்குகின்றன.
பயன்படுத்தப்பட்ட (செகண்ட் ஹேண்ட்) வாகன கடன் பெற விண்ணப்பிக்கும்போது, வங்கியால் வழங்கப்படும் கடன் மதிப்பு ஒரு முக்கியமானதாகும். இந்த மதிப்பு காரில் மதிப்பிடப்பட்ட மதிப்பில் 50-90 விழுக்காடு வரை இருக்கும். அந்த வகையில் ஏற்கனவே வங்கிக் கடனில் இருக்கும் வாகனங்களின் மதிப்புக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பது எளிதாக இருக்கும்.