புதுடில்லி,:சீனாவை சேர்ந்த மிகப் பெரிய மின்னணு வர்த்தக நிறுவனமான 'அலிபாபா குரூப் ஹோல்டிங்', கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரை அண்மையில் வேலையை விட்டு நீக்கி உள்ளது.
இந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில், 50 சதவீதம் அளவுக்கு அதன் நிகர வருவாயை இழந்துள்ளது. சீனாவின் மந்தமான பொருளாதாரம் மற்றும் விற்பனை சரிவு ஆகிய காரணங்களால், அலிபாபாவின் நிகர வருவாய் சரிவைக் கண்டுள்ளது.அலிபாபா நிறுவனம் அதன் ஜூன் காலாண்டில் மட்டும் 9,241 பேரை பணிநீக்கம் செய்து உள்ளது.
இதையடுத்து, நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை, 2.46 லட்சமாக குறைந்து உள்ளது.உலகளவில் பொருளாதார மந்த நிலை நெருங்கி வருவதன் அடையாளமாக இந்த ஆட்குறைப்பு இருப்பதாகவும்; இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் சில பாதிப்புகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.