tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்… எதிர்பார்த்த ரிசல்ட்!!
ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்… எதிர்பார்த்த ரிசல்ட்!!

ஐந்து மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்… எதிர்பார்த்த ரிசல்ட்!!

5state-result

பஞ்சாப், மணிப்பூர், கோவா

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 10ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது. நடந்தது. ஐந்து மாநிலங்களிலும் வெளியான ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியை பா.ஜ., தக்க வைக்கும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. சில கருத்துக் கணிப்புகள், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களில் இழுபறி ஏற்படும் என தெரிவித்துள்ளன.


இந்த ஐந்து மாநில தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடைபெற்று முடிந்துள்ள சட்டசபைத் தேர்தல் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.


மேலும் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தீர்மானிப்பதிலும் இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் முக்கிய பங்காற்று உள்ளன.உ.பி., பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மார்ச் 10) காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடக்கிறது. உ.பி.,யில் பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.


ஐந்து மாநில தேர்தலில் நான்கில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரசுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி


ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.

இதில்  உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது.


தேசிய அளவில் பரபரபுக்கு உள்ளான உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கெரி, ஹத்ராஸ் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து ‌வருகிறது.


5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.