சென்னை: ஷேன் வார்னேவின் எப்படி உயிரிழந்தார் என்பதற்கு பின்னால் உள்ள உண்மை காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்து வந்தவர் முன்னாள் வீரர் ஷேன் வார்னே.
இன்று மாலை திடீரென தாய்வான் அருகே உள்ள விடுதியில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 52.
ஆஸ்திரேலியாவில் இருந்த ஷேன் வார்னே தாய்வான் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் இன்று மாலை எந்தவித பேச்சு மூச்சும் இன்றி கிடந்துள்ளார். இதனையடுத்து அவரை பரிசோதித்து பார்த்ததில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என ஒருபுறம் கூறப்பட்டாலும், பல்வேறு சந்தேகங்கள் அவரின் மரணத்தில் எழுந்துள்ளன.
கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று ஷேன் வார்னே ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் மிகவும் இளமையாக, சிறப்பான உடற்கட்டுடனும் உள்ளார். அதனை குறிப்பிட்டு, ஜூலை மாதத்திற்குள் கடும் உடற்பயிற்சி மூலம் இதே நிலைமைக்கு திரும்பப்போகிறேன், பயிற்சியை தொடங்கப்போகிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை ஒரு சவாலாக எண்ணி செய்துளார்.
தொடர்ச்சியாக அளவு மீறிய உடற்பயிற்சிகளை செய்வது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் 50 வயதை கடந்துவிட்ட ஷேன் வார்னே, தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் ஆகியவைகளை இருந்து வந்துள்ளார். இதனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக உயிர் பிரிந்திருக்கலாம் எனத்தெரிகிறது.
இதனை சாதரண மாரடைப்பு எனக்கூறி தப்பிக்க முடியாது. எனவே இதுகுறித்த விசாரணையை நடத்தி உண்மையான காரணத்தை வெளியில் கூற வேண்டும் என ரசிகர்கள் கோரி வருகின்றனர். ஆஸ்திரேலிய வாரியமும் இதனை அப்படியே விட்டுவிடாமல், விரைவில் விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.