tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

Tamil_News_large_3097676

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்திய ராணுவ முகாமிற்குள் திடீரென புகுந்த 2 பயங்கரவாதிகள், முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 


பதிலுக்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதேபோல் அந்த இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.  இந்த  தாக்குதலில் காயமடைந்த  சில ராணுவ வீரர்களுக்கு ராணுவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   


இந்நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தது தெரியவந்துள்ளது. மற்ற இருவரும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என ராணுவம் அறிவித்துள்ளது.