tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
20 ஆயிரம் கால்நடைகள் கடத்தல் மன்னன்: மம்தாவின் உதவியாளர் சி.பி.ஐ.,யால் கைது
20 ஆயிரம் கால்நடைகள் கடத்தல் மன்னன்: மம்தாவின் உதவியாளர் சி.பி.ஐ.,யால் கைது

20 ஆயிரம் கால்நடைகள் கடத்தல் மன்னன்: மம்தாவின் உதவியாளர் சி.பி.ஐ.,யால் கைது

Tamil_News_large_309762320220811152258

கோல்கட்டா : மம்தாவின் நெருங்கிய உதவியாளரும் , திரிணாமுல் காங்., மூத்த நிர்வாகியுமான அனுப்பிரதா மோந்தல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.


ஏற்கனவே மம்தாவின் அரசில் அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமனத்தில் கோடி, கோடியாக லஞ்சம் சுருட்டிய ஒருவர் கைது செய்யப்பட்தை அடுத்து தற்போது மீண்டும் அரவது நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது மம்தாவுக்கு பேரிடியாக இறங்கி உள்ளது.


கடந்த 2015- 2017 மாநிலம் விட்டு அருகில் உள்ள வங்கதேசத்திற்கு 20 ஆயிரம் கால்நடைகள் சட்டத்திற்கு விரோதமாக கடத்தப்பட்டுள்ளது. இதில் உறுதுணையாக இருந்த அனுப்பிரதா மோந்தலுக்கு கோடிக்ககணக்கில் லாபம் கிட்டியது. இது தொடர்பாக மோப்பம் பிடித்த சிபிஐ வழக்கு பதிவு செய்து 11 பேரை தேடி வந்தது. இதில் மோந்தலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் பிர்பமில் சிபிஐ அதிகாரிகள் அனுப்பிரதா மோந்தலை கைது செய்தனர். முன்னதாக அவரது வீட்டின் அருகே 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த மாநில போலீசார் பலர் இதில் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுப்பிரதா மோந்தல் பிர்பம் மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ளார்.