tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
வாஞ்சி மணியாச்சி: நினைவு கூர்ந்தார் பிரதமர்
வாஞ்சி மணியாச்சி: நினைவு கூர்ந்தார் பிரதமர்

வாஞ்சி மணியாச்சி: நினைவு கூர்ந்தார் பிரதமர்

gallerye_122208672_3089361

புதுடில்லி: ''தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான், 25 வயதே ஆன வாஞ்சிநாதன், பிரிட்டிஷ் கலெக்டர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கினார்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்த மன் கி பாத் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்தது. சுதந்திர தினம் நெருங்கி வருவதே இதற்கு காரணம். இந்த ஆண்டு நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான வரலாற்று தருணத்தை காண போகிறோம்.


'அசாதிகாஅம்ரித்மகோத்சவ்' மிகப்பெரிய இயக்கமாக மாறியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர். இதன் ஒரு பகுதியாக வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவோம்.

சுதந்திர போராட்டத்தில் ரயில்வேயின் பங்களிப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரயில் நிலையங்கள் அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு, ' அசாதிகாஅம்ரித்மகோத்சவ்' தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கிறது.


அடிமை தளத்தில் இருந்து விடுதலை அடைந்திட துடிக்கும் தவிப்பு எத்தனை பெரியதாக இருந்திருக்கும். வந்தே மாதரம் பாரத மாதாகி ஜே என முழக்கங்களை உச்சரித்தபடி நமது நாட்கள் கழிந்திருக்கும். வருங்கால சந்ததி பொருட்டு நாமும் நமது வாழ்வை அர்ப்பணித்திருப்போம் இளமையை துறந்திருப்போம்.


தற்போது உலகளவில் பொம்மை ஏற்றுமதியில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஜூலையில் விளையாட்டு துறையில் மிக சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் வெகு சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.தேசியளவில் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம் ஆகியவை விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றுவதுடன், வருமானத்தையும் அதிகரித்துள்ளது.


கோவிட்டிற்கு எதிரான இந்தியா மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது. சர்வதேசஅளவில் ஆயுஷ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலகம் முழுவதும் ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருந்துகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. ஆயுஷ் ஏற்றுமதியும் சாதனை படைக்கத்தக்களவில் அதிகரித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


சமூக வலைதளங்களில் தேசிய கொடி


மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; ஆக., 2 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சுய விவரப்படமாக தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும். தேசிய கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையாவின் பிறந்த நாளை(ஆக.,2) நினைவு கூறவும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் இதனை செய்ய வேண்டும் என்றார்


புகழாரம்


மோடி பேசும் போது, தூத்துக்குடி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தான், 25 வயதே ஆன வாஞ்சிநாதன், பிரிட்டிஷ் கலெக்டர் செய்த தவறுக்கு தண்டனை வழங்கினார். இவ்வாறு அவர் நினைவுகூர்ந்தார்.