tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
பிரதமரின் சீரிய சிந்தனை; முதல்வரின் சிறிய சிந்தனை: சீறும் அண்ணாமலை!
பிரதமரின் சீரிய சிந்தனை; முதல்வரின் சிறிய சிந்தனை: சீறும் அண்ணாமலை!

பிரதமரின் சீரிய சிந்தனை; முதல்வரின் சிறிய சிந்தனை: சீறும் அண்ணாமலை!

annamalai88552-1641279551

சென்னை- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று விரிவான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


தமிழர்களின் புகழை உலகம் அறிய செய்தவர் பிரதமர் மோடி என்பதை அறியாத பேதையாக உலா வருகிறார் நமது தமிழக முதல்வர். நேற்று பிரதமரின் முன்னிலையில் தமிழக முதல்வர் ஆற்றிய உனரயில் உள்ள குறைகளை சுட்டிகாட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.


முதல்வர் தனது முன்னுரையில் தமிழக வளர்ச்சியானது பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, சமூக நீதி சிந்தனையையும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்று அலங்காரமான மேடை வார்ர்த்தைகளால் உச்சரித்தார். ஆனால் உண் மைநினல நமக்குத்தான் தெரியும்.


திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஒரு அதிகாரியை அவரது ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதற்கு, நீங்கள் வழங்கிய வெகுகமதி வெறும் துறை மாற்றம் மட்டும்தான். உங்கள் தந்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி, திருமாவளவனை நோக்கி நீங்கள் பொது தொகுதிக்கெல்லாம் ஆசைபடக்கூடாது என்றாராம். இப்படி சந்தி சிரிக்கிறது உங்கள் வரலாறு. இவற்றை நமது முதல்வர் பிரதமர் முன் குறிப்பிட தவறிவிட்டார்.


பொருளாதார வளர்ச்சியைப் பற்றி பேசும் நீங்கள், தமிழகம் ஏதோ 1967ஆம் ஆண்டுக்கு பிறகுதான் வளர்ந்தது என்ற தோற்றத்னத கொடுப்பதுதான் திராவிட மாயை. காமராஜர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் தொழில் துறை மேலோங்கி இருந்தது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற பெருமை

காமராஜரையே சேரும். திமுக செய்த ஒரே சாதனன, தொழில் வளர்ச்சியை சென்னையில் முடக்கியது மட்டும்தான்.


நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த ஆண்டு வந்த தொழில் முதலீடு தமிழகத்தைவிட 6 மடங்கு அதிகம். ஆனால் இங்கு திமுகவினர் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு முதலீடு பறந்து வருகிறது என்ற போலியான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.


.தொழில் வளர்ச்சியை தொடர்ந்து சில புள்ளி விவரங்கனை காற்றில் பறக்கவிட்டார் முதல்வர். அதில் மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி வெறும் 1.21 விழுக்காடு என்றார். இது தவறான தகவல். 2021-22ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கிய நிதி 7.4 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்திற்கு மத்திய அரசிலிருந்து பகிரப்பட்ட நிதி 70,189 கோடி ரூபாய். அதாவது 9.4 விழுக்காடு.


அது மட்டும் அல்லாது 2009-14 ஆண்டில் திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 62,615 கோடி ருபாய். இதுவே 2014-19 வனர பாஜக தலைமையிலான மத்திய அரசு வழங்கிய நிதி 1,19,455 கோடி ரூபாய்.


இவர்கள் சட்டப்பேரவையில் வாசித்த நிதிநினல அறிக்கையில் சுமார் 6500 கோடி ரூபாய் மட்டுமே GST நிலுவை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் நேற்று 14,006 கோடி ரூபாய் என்கிறார்கள். எந்த மாதத்திற்கான இழப்பீடு இது? முதல்வர் எதை கொடுத்தாலும் வாசிப்பதா? விசாரிக்கமாட்டீர்களா?


அடுத்ததாக கட்சத்தீவை திருப்பி பெற வேண்டும் என்றிருந்தார் முதல்வர். கச்சத்தீவு என்ற வார்த்தையை உச்சரிக்க கூட திமுகவுக்கு தகுதி கினடயாது. இவர்களும், இவர்களது கூட்டு களவாணியான காங்கிரஸ் கட்சியும் 1974ஆம் ஆண்டு கச்சத்தீனவ தாரைவார்த்து விட்டு இன்று கபட நாடகம் போடுகிறார்கள்.


கச்சத்தீவு மீட்பு என்பது ஏதோ கடலோரம் சென்று கருவாடு வாங்குவது போல் சுலபம் என்று நினனத்து கொண்டிருக்கும் முதல்வரை என்ன சொல்வது? திமுகஇதை பற்றி கவலைப்பட வேண்டாம். பிரதமர் பார்த்து கொள்வார்.


நீ ட் தேர்வு ரத்து என்பது நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதி. அது நிறைவேறாது. ஏன் என்பதற்கு காரணமும் உங்களுக்கு தெரியும். அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட ஒரு தேர்வு முனறயில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியமற்றது.


சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நேற்று நமது பாரத பிரதமர் மோடி ஒரு தலைசிறந்த தலைவரை போல் உனரயாடினார், ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிடம் எனும் வெங்காயத்தின் வெளிப்புற அடுக்கு போல் நடந்து கொண்டார்.


இனியாவது முதல்வர் மற்றவர் னகப்பிள்ளையாக இல்லாமல் சுயமாக சிந்தித்து செயல்பட்டு அடுத்த முறை பாரத பிரதமர் சென்னை வருகையில் திமுக தலைவராக இல்லாமல் தமிழக முதல்வராக கலந்து கொள்வார் என்று பாரதிய ஜனதா கட்சி நம்புகிறது என்று அண்ணாமலை தமது விரிவான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.