tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
இத்தனை நெருக்கடியிலும் டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்கி கொண்டிருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி!!
இத்தனை நெருக்கடியிலும் டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்கி கொண்டிருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி!!

இத்தனை நெருக்கடியிலும் டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்கி கொண்டிருக்கிறார்.. எடப்பாடி பழனிசாமி!! 

edappadi93445-1594196109-1644850832

சென்னை: தற்போதைய தமிழக அரசியலில், முதல்வர் முக ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் செல்வாக்குமிக்க தலைவராக தவிர்க்க முடியாத இடத்தை மீண்டும் ஒரு முறை தக்க வைத்து கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி


ஓபிஎஸ் 3 முறை அமைச்சராக இருந்தபோது, அதே அமைச்சவையில், அமைச்சராக அமர்ந்திருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.. ஆனால், இன்றைக்கு ஓபிஎஸ்ஸை தாண்டி அவரது விஸ்வரூபம் வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது.


அதனால்தான், அவரால் அதிமுகவில் மட்டுமல்லாமல், தமிழக அரசியல் தலைவர்களில் டாப் இடத்தில் தொடர்ந்து நீடித்து வர முடிகிறது.. முதல்வராக இருந்தபோது, இந்த செல்வாக்கு வரலாம் என்றாலும், ஆட்சி முடிந்தும் அதே கெத்தை தக்க வைத்து கொள்வது மிகவும் சிரமமான விஷயம்.. அந்த வகையில், 3 விதமான பிரச்சனைகள் கட்சிக்குள் தலைதூக்கவே செய்தன.


முதலாவதாக, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான பதிலை தமிழகமே அன்று ஆவலுடன் எதிர்பார்த்தது.. எத்தனையோ விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்தன.. இந்த முறை தனக்கான இடத்தை விட்டுவிடக்கூடாது என்று ஓபிஎஸ் எவ்வளவோ முயன்றார்.. இறுதியில் எடப்பாடியே முதல்வர் வேட்பாளரானார்.. அதேபோல, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பிரச்சனை உருவெடுத்தது..


இந்த பதவியானது கிட்டத்தட்ட எம்பி பதவி போலதான்.. நடந்து முடிந்திருந்த சட்டசபை தேர்தல் பிரச்சார சமயத்தில் கொங்குவை பலப்படுத்தி வைத்ததாலோ என்னவோ, கொங்குவின் வெற்றியை காட்டியே சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார்.. இதற்கும் ஓபிஎஸ் மல்லுக்கட்டினார்.. கோபித்து கொண்டு தேனி பண்ணை வீட்டுக்கே போய் உட்கார்ந்து கொண்டார்.. ஆனாலும் சாதித்தது எடப்பாடிதான்.


இப்போது அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக மண்ணை கவ்விய நிலையில், மீண்டும் ஒற்றை தலைமை என்ற பேச்சு அளவுக்கு அதிகமாக வெடித்து வரும் நிலையில், மீண்டும் தன் ஆளுமையை நிரூபித்து உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. உள்ளாட்சி தேர்தலில் கொங்கு உட்பட சரிந்தும், தேனி மாவட்ட அதிமுக தீர்மானம் போட்டும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தம்பியையே தூக்கியடிக்கிறார் என்றால் எடப்பாடி ஜெயலலிதா பாணியில் கட்சியை கட்டுக்குள் வைத்துள்ளாரா என்ற ஆச்சரிய கேள்வியையும் எழுப்பி வருகிறார்.


தேனியில் சசிகலா வர வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டபோதும், ஓபிஎஸ் தனியாக கூட்டம் போட்டு கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும், எடப்பாடி அசரவேயில்லை.. கடந்த 2 நாட்களாகவே சேலத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.. எப்படியும் ஓபிஎஸ் சசிகலா பக்கம் தாவ போகிறார், எந்த நேரத்திலும் அதற்கான அறிவிப்பு வரலாம் என்ற ஆர்வத்தில் தமிழகமே உள்ள நிலையில், இன்று சொந்த தம்பியை கட்சியில் இருந்து நீக்கும்படியான கையெழுத்தை ஓபிஎஸ பதித்துள்ளார் என்றால் அது எடப்பாடியின் தவிர்க்க முடியாத ஆளுமைதான்.


எந்த விஷயத்தையும் ஓபனாக பேசாமலேயே, பேச வேண்டிய நேரத்தில் அமைதி ஓபிஎஸ்.. எந்த விஷயத்திலும் உறுதிப்பாடு குறைவாக இருப்பவர் என்ற விமர்சனம் இருக்கிறது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அப்படி இல்லை.. டாண்..டாண்.. என எதிரிகூடாரத்தையும் வார்த்தைகளாலேயே நொறுக்கி கொண்டிருக்கிறார்.. சொந்த கட்சியிலும் சசிகலா விஷயத்தில் கறார் தன்மையை கடைப்பிடித்து வருகிறார். தன்னுடைய ஆதரவாளர்கள் யாரையுமே இதுவரை சசிகலா பக்கம் அணுகவிடாமல் இறுக்கமாக தன்பிடிக்குள் வைத்திருக்கிறார்..


கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் பிரச்சனைகளை சமாளிக்க கூடியவராக, முக்கியமாக ஜெயலலிதா பாணியில் அரசியலை நகர்த்தி வருவது அவருக்கு ஆகச்சிறந்த பிளஸ் ஆக அமைந்து வருகிறது.. காலம் சிலருக்கு சில வாய்ப்புகளை கொடுக்கிறது. திறமையுள்ளவர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்... அப்படித்தான் நம்முடைய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்..!