புதுடில்லி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ள பிரதமர் அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
