tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது: ராணுவ தளபதி
எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது: ராணுவ தளபதி

புதுடில்லி: கடந்த ஆண்டை காட்டிலும், எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது என ராணுவ தளபதி எம் எம் நரவானே தெரிவித்துள்ளார்.


தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு டில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்கு சென்ற ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி ஹரிகுமார், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


பின்னர், டில்லி கன்டோன்மென்ட்டில் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை ராணுவ தளபதி ஏற்று கொண்டார். தொடர்ந்து வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.


தொடர்ந்து அவர் பேசியதாவது: சீனா ஏற்படுத்திய பதற்றம் காரணமாக கடந்த ஆண்டு ராணுவத்திற்கு மிகப்பெரிய சவாலான ஆண்டாக அமைந்தது. நிலைமையை கட்டுக்குள் வைக்க சமீபத்தில் 14வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. சில இடங்களில் படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட எல்லையில் சூழ்நிலை மேம்பட்டுள்ளது.


ஆனால், எல்லை அருகே பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. 300 முதல் 400 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 144 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, அவர்களால் மிகப்பெரிய பதவிகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்ற முடியும். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவ்வாறு ராணுவ தளபதி நரவானே பேசினார்.


தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்சல்மரில், காசி அமைப்பு தயாரித்த 225 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட தேசியக்கொடி காட்சிபடுத்தப்பட்டது.


தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், ராணுவ வீரர்களின் வீரத்தையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், முப்படைகளின் வீரம், சாகசம் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன.