tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
“தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” – மாவட்டச் செயலாளர்களை எச்சரித்த ஸ்டாலின்
``தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” - மாவட்டச் செயலாளர்களை எச்சரித்த ஸ்டாலின்

``தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” - மாவட்டச் செயலாளர்களை எச்சரித்த ஸ்டாலின்

screenshot3146-1642086830

உட்கட்சித் தேர்தலில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்குத் தலைமை தாங்கிப் பேசிய முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின் பலரை எச்சரிக்கும்விதத்தில் பேசியிருக்கிறார். இது குறித்து மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேசியபோது, ``முதலில் ஜூன் 3-ம் தேதி கலைஞர் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பது பற்றிப் பேசினார். தொடர்ந்து, ஓராண்டு ஆட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். அடுத்ததாகப் பேசியதை நாங்களே எதிர்பார்க்கவில்லை.


அதாவது ஸ்டாலின், ``தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதலமைச்சராக நான் இருக்கிறேன். நீங்கள் அப்படித்தான். நீங்கள் அனைவரும்தானே கழகத் தொண்டர்களைக் கவனிக்க வேண்டும்... நீங்கள்தானே தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும்... கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா... தொண்டன் உழைக்காமல், நிர்வாகி வேலை பார்க்காமல், யாரும் வெற்றிபெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால், அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும்.


தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. கழகத்தினரின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளைச் செய்து தந்திட வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற செய்திதான் வர வேண்டும். அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்” என்று தொண்டர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.


இறுதியாகப் பேசியதைத்தான் யாருமே எதிர்பார்க்கவில்லை. `கட்சித் தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களை, தகுதி வாய்ந்த பொறுப்புகளுக்குக் கொண்டுவாருங்கள். உட்கட்சித் தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செய்த தவறுகள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை என்னுடைய கவனத்துக்கு வந்திருக்கிறது.


தவறு செய்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரியும். தவறு செய்தவர்களின் மனசாட்சிக்கும் தெரியும். தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளின் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும். இனி நடைபெறவிருக்கும் கழகத் தேர்தலை மிக கவனமாகவும், நேர்மையாகவும் நடத்திட வேண்டும் என்பதில் தலைமைக் கழக நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் உறுதியாக இருக்க வேண்டும்’ என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இது மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இடையே பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது” என்றனர்.