tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
போக்சோ: “தமிழகத்தில் முதலில் வழக்கு பதிவு… பின்னர்தான் விசாரணை!” – டி.ஜி.பி சைலேந்திர பாபு
``போக்சோவில் முதலில் வழக்கு பதிவு செய்த பின்பு விசாரணை தொடங்குவதால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து புகார் அளிக்க அதிகம் முன்வருகின்றனர்." - சைலேந்திர பாபு

போக்சோ: ``தமிழகத்தில் முதலில் வழக்கு பதிவு... பின்னர்தான் விசாரணை!" - டி.ஜி.பி சைலேந்திர பாபு

dgp-sylendra-babu

`போக்சோவில் முதலில் வழக்கு பதிவு செய்த பின்பு விசாரணை தொடங்குவதால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து புகார் அளிக்க அதிகம் முன்வருகின்றனர்." - சைலேந்திர பாபு


ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போலீஸாருடன் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.


கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சைலேந்திர பாபு, ``தமிழக அரசு ரௌடிசத்தை ஒடுக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. சரகம் வாரியாக ரௌடிசத்தை ஒடுக்குவதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி வேலூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் சரகத்திலும் ரௌடிகளை கண்காணித்து ஒடுக்குவதற்காக இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் வெளிநாடு, வெளிமாநில குற்றவாளிகளை கண்காணித்து வருகிறோம். அவர்களால் எந்த குற்றச் செயலும் நடக்கவில்லை. கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். ஆந்திராவிற்கு சென்று கஞ்சா வியாபாரியை கைது செய்து வந்துள்ளோம். அதேபோல் ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளிலும் கடத்தலுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக போலீஸாருடன் அனைத்து துறை அதிகாரிகளும் சேர்ந்து கண்காணித்து வருகிறோம். அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.