பெங்களூருவில் நடக்கும் இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அநேகமாக இன்று உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தியாவின் வெற்றிச் செய்தி கிடைக்கலாம்- என நேற்று எழுதியிருந்தேன்.
இது பகலிரவு ஆட்டம் என்பதால் உணவு இடைவேளை என்பது இரவு உணவு இடைவேலையாக இரவு 0700 மணிக்கு 40 நிமிட நேரம் வழங்கப்படும். ஆனால் நான் எதிர்பார்த்தது போல ஆட்டம் உணவு இடைவேளைக்கு முன்னர், அதாவது மாலை 0545க்கு முடிந்துவிட்டது.
தொடக்க ஆட்டக்காரராக ஆட வந்த திமுத் கருணரத்னே 174 பந்துகளில் 107 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கசல் மெண்டிஸ் 60 பந்துகளில் 54 ரன் எடுத்தார். இவர்களை அடுத்து இரட்டை இலக்க ரன் எடுத்தவர் நிரோஷன் டிக்வெல்லா (12 ரன்), மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் அஷ்வின் 4 விக்கட், பும்ரா 3 விக்கட், அக்சர் படேல் 2 விக்கட், சர் ஜதேஜா ஒரு விக்கட். ஆட்ட நாயகன் ஷ்ரேயாஸ் ஐயர். தொடர் நாயகன் ரிஷப் பந்த். அடுத்த கிரிக்கட் திருவிழா ஐ.பி.எல் 2022தான்.