tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
காங்கிரசை ஏன் கண்டிக்கவில்லை?: வைகோவுக்கு அண்ணாமலை கேள்வி
காங்கிரசை ஏன் கண்டிக்கவில்லை?: வைகோவுக்கு அண்ணாமலை கேள்வி

காங்கிரசை ஏன் கண்டிக்கவில்லை?: வைகோவுக்கு அண்ணாமலை கேள்வி

Tamil_News_large_2959526

சென்னை-'மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதற்கு, 'தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்கிரசை, வைகோ ஏன் கண்டிக்கவில்லை; அவரை கண்டா வரச்சொல்லுங்க...' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.வைகோ அறிக்கை:கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டசபையில் மார்ச் 4ல் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மேக தாது அணை கட்ட 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.


அணை கட்ட கர்நாடகாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வரும் மத்திய அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. இந்த விவகாரத்தில் திட்டவட்டமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும். கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறித்திட, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வைகோ அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: எதிர்க்கட்சிகளை கூட எதிர்பார்ப்புடன்கேட்க வைக்கும் கருத்தாழமிக்க பேச்சுக்கு வைகோ சொந்தக்காரர்.இந்தியாவின் சிறந்த பார்லிமென்ட் பேச்சாளராக அறியப்பட்ட அவரது சிந்தனை திறனும், செயல்திறனும் குன்றி விட்டதோ என, நான் அஞ்சுகிறேன்.எண்ணத்தில் தெளிவும், கருத்தில் ஆழமும், சொற்களில் சுத்தமும், நெஞ்சத்தில் நேர்மையும், ஆளுமையில் வீரமும் பொங்க தாங்கள் தி.மு.க.,வை எதிர்த்த நாட்களில், உங்களை கண்டு வியந்திருக்கிறேன்.


தற்போது, 'அவரை கண்டா வரச்சொல்லுங்க...'என, நான் தேடி கொண்டிருக்கிறேன். மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக பா.ஜ.,வை கண்டித்து நீண்ட ஓய்வுக்கு பின் அறிக்கை கொடுத்திருக்கும் வைகோ, தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை ஏன் கண்டிக்கவில்லை. கடந்த 2017ம் ஆண்டு, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தான், 106 டி.எம்.சி., தண்ணீரை தேக்க, 9,000 கோடி ரூபாயில் மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டது.


தற்போது, 'தமிழக அரசின் அனுமதியை கோரத் தேவையில்லை. மேகதாது அணை கட்டுவதற்காக நான் பாதயாத்திரை செல்கிறேன்' என, அதே கர்நாடகாவில் இருந்து காங்., தலைவர் சித்தராமையா சொல்லியிருப்பது வைகோவின் கண்களுக்கு புலப்படவில்லையா.உச்ச நீதிமன்றம் அறிவித்த பருவ காலங்களுக்கு ஏற்ற, குறைந்தபட்ச நதிநீர் ஒதுக்கீட்டை கர்நாடக அரசு தமிழகத்திற்கு முழுமையாக தர வேண்டும் என்பதில், தமிழக பா.ஜ., உறுதியாக இருக்கும்.நதிநீர் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அறிவித்த குறைந்தபட்ச நதிநீர் ஒதுக்கீட்டில், ஒரு சொட்டு நீரைக்கூட விட்டுத்தர பா.ஜ., சம்மதிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.