tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
ஏப்ரல் 4 முதல்.. வங்கி அறிவித்த புதிய விதிமுறை!
ஏப்ரல் 4 முதல்.. வங்கி அறிவித்த புதிய விதிமுறை!

ஏப்ரல் 4 முதல்.. வங்கி அறிவித்த புதிய விதிமுறை!

bank

முக்கியமான காசோலை மோசடியை தவிர்ப்பதற்காக பஞ்சாப் வங்கி ஏப்ரல் 4ஆம் தேதி முதல் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.


இந்தியாவின் முன்னணி வங்கியாக இருக்கும் ரிசர்வ் வங்கி , பாசிட்டிவ் பே சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த முறை சமீப காலமாக அனைத்து வங்கிகளும் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் நடைமுறைப்படுத்தி உள்ளது.


புதிய விதிகளின் படி 10 லட்சம் ரூபாய் அல்லது 10 லட்சத்திற்கும் மேல் உள்ள காசோலையை ஆக்டிவ் செய்ய வேண்டுமென்றால் பயனாளிகளிடம் இருந்து அவர்களின் தகவல்கள் உறுதிபடுத்தப்பட்ட பின்னரே செயல்படுத்த முடியும்.


10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலையை பயன்படுத்த வேண்டுமென்றால் பயனாளர்களின் விவரங்கள் காசோலை எண் காசோலை யாருக்கு கொடுக்கப்பட உள்ளது?, எவ்வளவு தொகை? மற்றும் காசோலை தேதி போன்ற முக்கிய தகவல்களை ஆன்லைன் மூலமாகவும், நேரிலும், மொபைல் மூலமாகவும் வங்கிக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்.


அவ்வாறு செய்தால் மட்டுமே அந்த காசோலை பரிவர்த்தனையும் அடுத்த நிலைக்கு செல்லும் என கூறப்பட்டிருக்கிறது.


வாடிக்கையாளர்கள் அதை குறிப்பிட மறந்தாலும் வங்கி நிர்வாகம் அவர்களை தொடர்பு கொண்டு இந்த தகவல்களை முழுமையாக பெற்ற பின்னரே காசோலை பரிவர்த்தனை செய்ய வேண்டும் என வங்கி அறிவித்திருந்தது.


இந்நிலையில் இந்த புதிய திட்டத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்படுத்தியுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் காசோலை மோசடி தவிர்க்க வங்கி இந்த புதிய உத்தரவை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது என கூறப்பட்டுள்ளது.