tn-mei-india
header-logo-left
tn-mei-india
47ea0c36d2c2aca0a856309830566d24
முக்கிய செய்தி
மதுரையில் பரபரப்பு: கள்ளக்குறிச்சியை போல பள்ளி விடுதியின் மாடியில் இருந்து ...             மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள்!!              போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவுப்பாதை தான்: முதல்வர் பேச்சு              பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்             
சென்னை திமுக.,வின் கோட்டை; அதில் பா.ஜ., போடுது ஓட்டை: அண்ணாமலை
சென்னை திமுக.,வின் கோட்டை; அதில் பா.ஜ., போடுது ஓட்டை: அண்ணாமலை

சென்னை திமுக.,வின் கோட்டை; அதில் பா.ஜ., போடுது ஓட்டை: அண்ணாமலை

Tamil_News_large_2959526

சென்னை: சென்னை திமுக.,வின் கோட்டை என்கிறார்கள், அந்த கோட்டையில் நாங்கள் ஓட்டை போடுவோம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மணலியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: சென்னையை திமுக.,வின் கோட்டை என சொல்வார்கள். ஆனால் இப்போது அந்த கோட்டையில் மிகப்பெரிய ஓட்டையை பா.ஜ., போட்டு வருகிறது. 500க்கும் மேல் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து அதன்மூலமாக ஆட்சிக்கு வந்த திமுக, முழுமையாக 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றமுடியாமல் தத்தளித்து வருகிறது.


சுமார் 2.64 கோடி மக்கள் ஓட்டளிக்கக் கூடிய இந்த தேர்தலில் பிரசாரத்திற்கு மாநில முதல்வர் ஸ்டாலின் வீட்டில் இருந்துகொண்டு, காணொலி மூலமாக பிரசாரம் செய்து வருகிறார். மக்களை, தாய்மார்களை சந்திப்பதற்கும், அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வதற்கும் பயமே இதற்கு காரணம். 8 மாத காலத்தில் திமுக.,வின் ஒரே சாதனை, பொய்யை மட்டுமே சொல்லி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது தான். இவ்வாறு அவர் பேசினார்.